நாகாலாந்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக - என்டிபிபி கூட்டணி 

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து பேரவைக்கு நடந்த தேர்தலில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து பேரவைக்கு நடந்த தேர்தலில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி, இந்தக் கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம், இந்தக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியிருக்கிறது.

பாஜக வேட்பாளர் பஷங்மோங்பா 5,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

நாகாலாந்து மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி 36 இடங்களில் முன்னிலை வகிக்க, நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சுயேச்சை உள்ளிட்ட இதர கட்சிகள் 22 இடங்களில் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் கட்சி இதுவரை எந்தத் தொகுதியிலும் முன்னிலையில் இல்லை என்று களநிலவரம் தெரிவிக்கிறது.

தேர்தலில் பல முனை போட்டி நிலவிய நிலையில், 16 சுயேச்சைகளும் களத்தில் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com