பாஜக ஆதரவு கோரும் மேகாலயா முதல்வர்!
மேகாலயா மாநிலத்தில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி முன்னணியில் உள்ள தேசிய மக்கள் கட்சி முதல்வர் வேட்பாளரான கான்ராட் சங்மா அமித் ஷாவின் ஆதரவைக் கோரியுள்ளார்.


மேகாலயா மாநிலத்தில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி முன்னணியில் உள்ள தேசிய மக்கள் கட்சி முதல்வர் வேட்பாளரான கான்ராட் சங்மா, அமித் ஷாவின் ஆதரவைக் கோரியுள்ளார்.
இதனை அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது சுட்டுரைப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேகாலயா மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலைமுதல் நடைபெற்று வருகிறது.
மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 26 தொகுதிகளில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சி அமைக்க 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதனால், தேசிய மக்கள் கட்சி முதல்வர் வேட்பாளரான கான்ராட் சங்மா, அமித் ஷாவுக்கு தொடர்புகொண்டு ஆதரவு கோரியுள்ளார்.
மேகாலயாவில் ஆட்சி அமைக்க தங்கள் ஆதரவும் ஆசிர்வாதமும் தேவை எனப் பேசியதாக, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...