தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய புதிய விதி: உச்ச நீதிமன்றம் 

குழுவின் பரிந்துரையின்பேரில், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழுவின் பரிந்துரையின்பேரில், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் முறையில் சீர்திருத்தம் கோரி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய புதிய விதிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர்,  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு மூலமே தேர்தல் ஆணையர் தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையர் தேர்வு செய்யும் முறையைப் போலவே நீக்கம் செய்யும் நடைமுறையும் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்திய தலைமை தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் ஆகியோரை நியமிக்க கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசஃப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்தது வந்தது. இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், நவ.24-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com