தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மேகாலயத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை; பின்னடைவில் முதல்வர்

இதுவரை வெளியான முடிவுகளின்படி, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2023, 10:36 am

DIN

மேகாலய மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலய மாநிலம் தெற்கு துரா தொகுதியில் பாஜக வேட்பாளர் பெர்நார்டு மரக் முன்னிலையில் உள்ளார். மேகாலயத்தின் முதல்வர் சங்மா பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆளும் தேசிய மக்கள் கட்சி 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், பாஜக - 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. சுயேச்சை மற்றும் இதர கட்சிகள் 23 இடங்களில் முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், இதுவரை எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.