நாகாலாந்து சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் எம்.எல்.ஏ. வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி)-பாஜக கூட்டணி முறையே 40, 19 தொகுதிகளில் களமிறங்கின. நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 12 வேட்பாளா்களை களமிறக்கின.

நான்கு பெண் வேட்பாளர்கள்: நாகாலாந்தில் ஹெக்கானி ஜக்காலு, சால்ஹூட்டூ க்ரூஸ், ஹுகாலி செமா மற்றும் ரோஸி தாம்சன் ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் களமிறங்கினர்.
இதில், திமாபூர்-3 தொகுதியில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி(என்டிபிபி) கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஹேக்கானி ஜக்காலு வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எல்.ஜே.பி (ராம் விலாஸ்) வேட்பாளர் அஸெட்டோ ஜிமோமியைவிட 1,536 வாக்குகள் அதிகம் பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | அதானி-ஹிண்டென்பர்க்: சிறப்பு நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்
நாகாலாந்து சட்டப்பேரவை வரலாற்றில் பெண் ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
ஹேக்கானி ஜக்காலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
47 வயதான ஹேக்கானி ஜக்காலு, சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுள்ளார். தொழிலதிபராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


