மனரீதியில் என்னை துன்புறுத்துகிறார்கள்: மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு!
சிபிஐ அதிகாரிகள் தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாக தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.


சிபிஐ அதிகாரிகள் தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாக தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையும் படிக்க: ஜெயம்ரவியின் 'அகிலன்' திரைப்பட டிரைலர் வெளியீடு
மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாள் (மார்ச் 4 வரை) சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
மணீஷ் சிசோடியாவுக்கு பிறப்பித்த சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் மேலும் 3 நாள்கள் காவலை நீட்டிக்க சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மேலும் 2 நாள்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் சிறப்பு நீதிபதி முன்பாக ஆஜரான தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகள் தன்னை மனரீதியில் துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியான எம்.கே.நாக்பால், சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விகளேயே மீண்டும் கேட்கக் கூடாது. புதிதாக அவரிடம் கேட்பதற்கு ஏதேனும் இருந்தால் கேட்க வேண்டும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: பாகுபலி 2-ஐ பின்னுக்கு தள்ளிய பதான்!
இது தொடர்பாக மணீஷ் சிசோடியா சிறப்பு நீதிபதி முன்பு கூறியதாவது: சிபிஐ அதிகாரிகள் என்னை அவமதிக்கும் விதமாக விசாரணை நடத்தவில்லை. ஆனால், அவர்களுக்கு 8-9 மணி நேரமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திரும்பத் திரும்ப நான் பதிலளித்துக் கொண்டிருக்கிறேன். அது போன்ற கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் மீண்டும் மீண்டும் பதிலளிப்பது என்னை மனரீதியில் துன்புறுத்துகிறது என்றார்.
சிபிஐ விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியா தரப்பில் கூறியதாவது: மணீஷ் சிசோடியா அவர்களின் மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த சூழலில் சிசோடியா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் எனக் கூறி காவலை நீட்டிக்க அனுமதி கேட்பதை எப்படி ஏற்றுக் கொள்வது. அவர்களால் குறிப்பிட்ட நாளில் திறம்பட விசாரணையை மேற்கொள்ள முடியவில்லை. மணீஷ் சிசோடியா உண்மையை ஒப்புக் கொள்ளும் வரை அவர் எங்களது காவலில் இருப்பார் என அவர்களால் கூற முடியாது. அவர்கள் கொடுக்கப்பட்ட காலத்துக்குள் அவர்களது விசாரணையை முடித்திருக்க வேண்டும். அவர்கள் விசாரணையை முடிக்காமல் அவர்களது பணியை திறம்பட செய்யவில்லை என்பதற்காக கால அவகாசத்தை நீட்டிக்க முடியுமா? என்றனர்.
இதையும் படிக்க: வகுப்புவாத உணர்வுகளை தூண்டும் எதிர்க்கட்சிகள்: பகவந்த் மான்
மணீஷ் சிசோடியாவை விசாரிக்க மேலும் 2 நாள்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்ட நீதிமன்றம், சிசோடியா தரப்பில் ஜாமீன் வழங்க முறையிட்டுள்ள மனுவுக்கு மார்ச் 10 ஆம் தேதிக்குள் சிபிஐ பதிலளிக்க வேண்டும் என தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...