மும்பை: மகாராஷ்டிரம் மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நிலத்தடியில் சென்ற குடிநீர் குழாய் வெடித்து உடைந்ததால் சாலையில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் படுகாயம் அடைந்துள்ளார்.
மகாராஷ்டிரம் யவத்மால் மாவட்டம் விதர்பா ஹவுசிங் சொசைட்டி அருகே சனிக்கிழமை நிலத்தடியில் சென்ற குடிநீர் குழாய் வெடித்து உடைந்ததால் தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறிய போது ஏற்பட்ட அதிர்வால் சாலையிலும் விரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் அதிகளவு தண்ணீரில் சிக்கிக் கொண்டு படுகாயம் அடைந்துள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.சி. கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த விடியோவில் குடிநீர் குழாய் வெடித்து உடைந்ததால் தண்ணீர் பீய்ச்சியடிப்பதும், அப்போது பழுப்பு நிற தண்ணீர் அலையின் கீழ் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்த பெண் ஸ்கூட்டர் ஓட்டி வரும்போது சிக்கிக் கொள்வதும், அந்த பெண் தண்ணீர் அலையில் அடிபட்டு படுகாயமடைந்திருப்பது பதிவாகி உள்ளது.
மேலும், சாலையில் பெரிய விரிசல் ஏற்பட்ட காட்சிகளும் அதில் உள்ளன. குடிநீர் குழாயில் இருந்து வெளிவந்த தண்ணீர் அங்கிருந்த ஒரு பள்ளம் முழுவதும் நிரம்பி வெளியேறியது. மேலும் சாலை முழுவதும் கற்களும் சிதறி கிடந்தன.
இந்த விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் பெங்களூருவின் இட்டமடு மெயின் ரோட்டின் அருகில் ஸ்மார்ட் சிட்டி கட்டப்பட்டு வரும் பகுதி சாலை குழி விழுந்து சாலை சிதிலமடைந்ததில் அந்த பகுதியில் சைக்கிளில் வந்துகொண்டிடிருந்த ஒருவர் காயமடைந்தார்.
2020 இல், மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


