மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 9 காவலர்கள் பலி, 13 பேர் காயம்! 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் திங்கள்கிழமை நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 9 பாதுகாப்பு வீரர்கள் பலியாகியுள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். 

News image
Updated On :6 மார்ச் 2023, 7:46 am

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் திங்கள்கிழமை நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 9 பாதுகாப்பு வீரர்கள் பலியாகியுள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். 

குவெட்டா சிபி நெடுஞ்சாலையில் உள்ள காம்ப்ரி பாலத்தில் பலுசிஸ்தான் காவலர்களின் டிரக் அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இது தற்கொலைத் தாக்குதல் என்று கச்சியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் மெஹ்மூத் நோட்ஜாய் தெரிவித்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உள்ளூர் நிர்வாகமும், பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

பலுசிஸ்தான் பாதுகாப்புப் பணியாளர்கள் பணி முடிந்து திரும்பும்போது இந்த குண்டுவெடிப்பின் காரணமாக டிரக் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்த பணியாளர்கள் சிபி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைபர் பக்துன்க்வா மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையோரப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.