
மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிம்லாவை சேர்ந்த ஹிந்து கோயிலில் இஸ்லாமிய தம்பதியர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது.
ஹிமாச்சலின், சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் பகுதியில் சத்ய நாராயணன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வகித்து வருகிறது. சத்தியநாராயணன் கோயிலில் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ராகுல் ஷேக் மற்றும் நிமாயத் மாலிக் விருப்பம் தெரித்தனர். இதற்கு கோயில் சார்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி இஸ்லாமிய தம்பதியருக்கு மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து கோயில் செயலாளர் வினய் சர்மா கூறுகையில்,
எங்கள் கோயிலில் முதன்முறையாக இஸ்லாமிய தம்பதியர்களின் திருமணம் நடைபெறுகிறது.
சத்தியநாரயணன் கோயில் நிர்வாகத்தை விஷ்வபரிஷத் கவனித்து வருகிறது. கோயில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அலுவலகம் செயல்படுகிறது. ஹிந்து பரிஷத் ஆர்ஆர்எஸ் அமைப்புகள் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று சொல்லப்படுகிறது.
இதை பொய்யாக்கும் வகையில் ஹிந்து கோயிலில் இஸ்லாமிய திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண விழா இஸ்லாமிய பாரம்பரியத்தின் முறைப்படி நடைபெற்றாலும், இந்து முறைப்படி சைவ உணவே பரிமாறப்பட்டது
இத்திருமணத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் கலந்துகொண்டனர்.
மணப்பெண்ணின் தந்தை மகேந்தி மாலிக் கூறுகையில்,
இந்த திருமணத்தைக் கோயில் வளாகத்தில் செய்வதன் நோக்கம் மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை பரப்புவதாகும். கோயில் நிர்வாகிகள் திருமணத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர்.
புதுமணத் தம்பதிகளில் மணமகன் கட்டடப் பொறியாளா். மணமகள் எம்.டெக் பட்டதாரி ஆவாா். இருவீட்டார் மற்றும் மனமக்களின் ஒப்புதலுடனும் இந்த திருமணம் நடைபெற்றதாக அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.