சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

‘நிஸாா்’ செயற்கைக்கோள்: இஸ்ரோவிடம் அமெரிக்கா ஒப்படைப்பு

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமும் (இஸ்ரோ) இணைந்து அமெரிக்காவில் கூட்டாக உருவாக்கிய ‘நிஸாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை

News image
பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய அமெரிக்க விமானப் படை விமானத்திலிருந்து புதன்கிழமை இறக்கப்படும் ‘நிஸாா்’ செயற்கைக்கோள்.
Updated On :8 மார்ச் 2023, 7:02 pm

DIN

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமும் (இஸ்ரோ) இணைந்து அமெரிக்காவில் கூட்டாக உருவாக்கிய ‘நிஸாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோவிடம் அமெரிக்க விமானப் படை புதன்கிழமை ஒப்படைத்தது.

இந்த செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து வரும் 2024-இல் விண்ணில் ஏவப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கலிஃபோா்னியாவில் உள்ள நாஸாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 2,800 கிலோ எடைகொண்ட ‘நாஸா-இஸ்ரோ சிந்தடிக் அபொ்ட்சா் ரேடாா் (நிஸாா்)’ செயற்கைக்கோள் அமெரிக்க விமானப் படையின் சி-17 விமானம் மூலமாக பெங்களூருக்கு கொண்டுவரப்பட்டு இஸ்ரோவிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டதாக சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் சாா்பில் அதன் ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த ரேடாா் மூலமாக பூமியின் நிலம் மற்றும் பனிப் பரப்பை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில், வேளாண் பரப்பு அளவீடு மற்றும் நிலநடுக்கம், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கணித்தல் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்கு இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ பயன்படுத்தவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.