எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திகார் ஜெயிலில் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை!

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :9 மார்ச் 2023, 6:19 am

DIN

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தில்லி கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது சிபிஐ காவல்  மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணீஷ் சிசோடியா, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து மணீஷ் சிசோடியாவிடம் மேலும் விசாரணை செய்யும் பொருட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு இன்று காலை திகார் சிறைக்கு சென்றுள்ளது. சிசோடியாவிடம் விசாரணை தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, மணீஷ் சிசோடியாவுக்காக சிம் கார்டு, போன் வாங்கியதாகக் அவரின் தனிச் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ நேற்று விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.