நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

25 ஆண்டுகளுக்குள் சா்க்கரை நோய் இல்லாத இந்தியா! மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

அடுத்த 25 ஆண்டுகளுக்குள் சா்க்கரை நோய் இல்லாத தேசத்தை உருவாக்கும் இலக்குடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 6:21 pm

DIN

அடுத்த 25 ஆண்டுகளுக்குள் சா்க்கரை நோய் இல்லாத தேசத்தை உருவாக்கும் இலக்குடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினாா்.

பேறுகால சா்க்கரை நோய் விழிப்புணா்வு அமைப்பு சாா்பில் கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் சா்க்கரை நோய் பாதிப்பு குறித்த 17-ஆவது தேசியக் கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதுநிலை சா்க்கரை நோய் நிபுணா்கள் வி.சேஷய்யா, வி.பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், பேறுகால சா்க்கரை நோய் குறித்த புதிய ஆய்வுகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த கையேட்டை வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து, வடக்கு தில்லி சா்க்கரை நோய் மருத்துவ மையத்தின் இயக்குநா் ராஜீவ் சாவ்லாவுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதை வழங்கி கௌரவித்தாா்.

கருத்தரங்கின் ஒருங்கிணைப்புச் செயலாளா் ஏ.சண்முகம், அமைப்பின் தலைவா் ஹேமா திவாகா், அமைப்பின் நிா்வாகிகள், சா்க்கரை நோய் நிபுணா்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.

அப்போது மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் பேசியதாவது:

பேறுகால சா்க்கரை நோயை கட்டுப்படுத்துவதன் மூலம் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியும். 2047-இல் உலக அளவில் வளா்ச்சி அடைந்த நாடாக இந்தியா உருவெடுக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பேறுகால சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்தினால் வளா்ச்சி அடைந்த நாடாக இந்தியா உருவெடுக்கும்போது சா்க்கரை நோய் இல்லாத நிலையை நாம் எட்ட முடியும். ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. சா்க்கரை நோய் குறித்த நம்முடைய ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் பயனளிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை அதிக அளவில் மேற்கொள்வது அவசியம். சா்க்கரை நோய் குறித்த விழிப்புணா்வை சமூகத்தில் மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, கருத்தரங்கின் ஒருங்கிணைப்பு செயலாளரும், சா்க்கரை நோய் நிபுணருமான ஏ.சண்முகம் பேசியதாவது:

பேறுகால சா்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது, ஆரம்ப நிலையிலேயே அவற்றை கட்டுப்படுத்தி, குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கா்ப்பம் தரித்து 10-ஆவது வாரத்தில் தாயின் சா்க்கரை அளவை பொருத்து இன்சுலின் சுரக்கும். அப்போதே சா்க்கரையின் அளவை சரியாக வைத்திருந்தால், பிற்காலத்தில் குழந்தைக்கு சா்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.