நொய்டாவில் ரூ.14 கோடிக்கு மதுபானம் விற்பனை: என்ன காரணம்?

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுவதும் சுமார் 14 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா முழுவதும் சுமார் 14 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்தில் எந்த பண்டிகையும் களைக்கட்டாத நிலையில், இந்தாண்டு ஹோலி பண்டிகையை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

ஹோலி பண்டிகையையொட்டி மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் சுமார் 4.20 லட்சம் பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன. அதேநேரத்தில் வெளிநாட்டு மதுபானங்கள் உள்பட 1.35 லட்சம் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்தாண்டு தோராயமாக நாட்டு மதுபானங்கள்(250 மில்லி) 6 லட்சத்துக்கும், வெளிநாட்டு மதுபானங்கள் 75,000 பாட்டில்களும், பீர் பாட்டில்கள் 3 லட்சத்துக்கும் விற்பனை ஆன நிலையில், மொத்த வருமானம் சுமார் ரூ.11.5 கோடியாக இருந்தது. 

இந்நிலையில், இந்தாண்டு கௌம் புத்த நகரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 6, 7 ஆகிய இரு தேதிகளில் மட்டும் மதுபானம் விற்பனையில் அரசுக்கு சுமார் ரூ.14 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

2020ஆம் ஆண்டிற்குப் பிறகு கிடைத்த அதிக வருமானம் இதுவாகும் என்று மாவட்ட கலால் அதிகாரி ராகேஷ் பகதூர் சிங் தெரிவித்தார். நொய்டா மற்றும் கிரேட்டர் நோய்டா முழுவதும் மொத்தம் 549 மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன. 

ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 8-ஆம் தேதி மதுக்கடைகள் மாநிலம் முழுவதுமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com