அநீதிக்கு எதிரான தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும்: பிரதமர் மோடி

வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட தினத்தில் மகாத்மா காந்திக்கும், தண்டி யாத்திரையில் பங்கு பெற்றவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். 
அநீதிக்கு எதிரான தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும்: பிரதமர் மோடி

வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரை மேற்கொள்ளப்பட்ட தினத்தில் மகாத்மா காந்திக்கும், தண்டி யாத்திரையில் பங்கு பெற்றவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். 

பல விதமான அநீதிகளுக்கு எதிராக உறுதியுடன் மேற்கொள்ளப்பட்ட தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1930-ல் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் தண்டி யாத்திரை எனவும் அறியப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தண்டி யாத்திரை மிக முக்கிய நிகழ்வாகும். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மகாத்மா காந்தியின் தலைமையில் சத்தியாகிரகிகள் பலர் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றனர். இந்த உப்பு சத்தியாகிரக யாத்திரை அகமதாபாத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மார்ச் 12, 1930 ஆம் ஆண்டு தொடங்கி ஏப்ரல் 5, 1930 வரை நடைபெற்றது. இந்த யாத்திரை தண்டியை சென்றடைந்து அங்கு கடல் நீரில் இருந்து உப்பு காய்ச்சி எடுக்கப்பட்டது. இதன்மூலம், உப்பு எடுக்க ஆங்கிலேயர்களால் போடப்பட்டிருந்த சட்டத்தினை சத்தியாகிரகிகள் மீறினர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரை தினத்தில் மகாத்மா காந்திக்கும், அதில் பங்கேற்றவர்களுக்கும் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: தண்டி யாத்திரையை மேற்கொண்ட மகாத்மா காந்திக்கும், அவருடன் தண்டி யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தண்டி யாத்திரை மிகவும் முக்கிய நிகழ்வாகும். பல்வேறு அநீதிகளுக்கு எதிராக நடைபெற்ற இந்த தண்டி யாத்திரை எப்போதும் நினைவுகூரப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com