ரயில்வே பணி ஊழல் வழக்கு: லாலு பிரசாத்துக்கு ஜாமீன்!

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிராசாத், அவரது மனைவி மற்றும் மகளுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ரயில்வே பணி ஊழல் வழக்கு: லாலு பிரசாத்துக்கு ஜாமீன்!
Updated on
1 min read

தில்லி: ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிராசாத், அவரது மனைவி மற்றும் மகளுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு தொடா்பாக லாலு பிராசாத் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ. 1 கோடி ரொக்கம், ரூ. 1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ. 600 கோடி மதிப்பிலான மோசடி வருவாய்க்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்று அமலாக்கத்துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, அவரது மகள் எம்.பி. மிசா பாரதி ஆகியோர் இன்று ஆஜராகினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்டு லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், ஜாமீன் வழங்கப்பட்டுள்ள அனைவரும் தலா ரூ.50,000 மதிப்பிலான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சோ்ந்த சிலா் நியமிக்கப்பட்டனா்.

அதற்கு கைம்மாறாக, வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது. அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கியுள்ளனா் என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com