ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பெய்லி பாலத்தைத் திறந்துவைத்தார் ஹிமாச்சல் முதல்வர்!

ஹிமாச்சலின் சம்பா மாவட்டத்தில் உள்ள பெய்லி பாலத்தை அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இன்று திறந்துவைத்தார். 

News image
Updated On :15 மார்ச் 2023, 12:18 pm

DIN

ஹிமாச்சலின் சம்பா மாவட்டத்தில் உள்ள பெய்லி பாலத்தை அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இன்று திறந்துவைத்தார். 

10 கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.50 கோடி செலவில் கட்டப்பட்ட 190 அடி நீளப் பாலத்தை ஒன்றரை மாதங்களில் கட்டப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் தாக்கூர் சிங் பர்மோரி மற்றும் துணை ஆணையர் டி.சி.ராணா ஆகியோர் கலந்துகொண்டனர். 

கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் பாலம் இடிந்து விழுந்தது. இந்நிலையில் குறைவான நேரத்தில் பாலம் கட்டுமானப் பணிகளை முடித்த பொதுப்பணித்துறை மற்றும் பொறியாளர்களின் முயற்சியை முதல்வர் பாராட்டினார். பாலத்தை விரைவில் கட்டி முடிக்க சிறப்பு ஆர்வம் காட்டிய பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங்கையும் அவர் பாராட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.