நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்: 2வது நாளாக மீட்புப் பணி தீவிரம்!

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவனை மீட்கும் பணி 2-ஆவது நாளாக மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

News image

கோப்புப் படம்.

Updated On :15 மார்ச் 2023, 7:15 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவனை மீட்கும் பணி 2-ஆவது நாளாக மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், 

செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் 60 ஆடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 43 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

51 அடி ஆழத்திற்கு இணையான குழி தோண்டப்பட்டு, அதை போர்வெலுடன் இணைக்க மீட்புப் பணியாளர்கள் சுரங்கப்பாதை தோண்டி வருகின்றனர். அடுத்த 2 மணி நேரத்தில் மீட்புப் பணிகள் முடிவடையும் எனத் தெரிகிறது.

கடுமையான பாறைகள் நிறைந்திருந்ததால் தோண்டுவது சிரமமாக இருந்ததாக மீட்புப் படையினர் கூறியுள்ளனர். 

இதுகுறித்து விதிஷா கலெக்டர் உமாசங்கர் பார்கவா கூறுகையில், சிறுவனின் அசைவுகளை மீட்புக் குழுவினர் கவனித்துள்ளனர். விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

லோகேஷ் அஹிர்வார் என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது, லேட்டரி தாலுகாவிற்குள்பட்ட கெர்கேடி பத்தர் கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.

ஆழ்துளைக் கிணற்றில் சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு, இரவு நேரத்தில் படக்கருவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது பார்கவா தெரிவித்தார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.