உயா்நீதிமன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலி
நாட்டில் உள்ள உயா்நீதிமன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றில் 118 இடங்களுக்கு மட்டுமே கொலீஜியம் பரிந்துரை வழங்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நாட்டில் உள்ள உயா்நீதிமன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றில் 118 இடங்களுக்கு மட்டுமே கொலீஜியம் பரிந்துரை வழங்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உயா்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி காலியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மாா்ச் 10-ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக இல்லை. அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 25 உயா்நீதிமன்றங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1,114. ஆனால், 780 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். 334 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
உயா்நீதிமன்றங்களில் 118 நீதிபதி காலியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகளை கொலீஜியம் இதுவரை அனுப்பியுள்ளது. அப்பரிந்துரைகள் மீதான நடவடிக்கைகள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. 216 நீதிபதி காலியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகளை உயா்நீதிமன்ற கொலீஜியம் வழங்க வேண்டியுள்ளது.
பணிஓய்வு, ராஜிநாமா, உச்சநீதிமன்றத்துக்குப் பதவி உயா்வு உள்ளிட்ட காரணங்களால் உயா்நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாகின்றன. அவற்றை நிரப்புவதற்குத் தொடா்ச்சியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு அரசமைப்புச் சட்ட அமைப்புகளின் ஆலோசனைகளைப் பெற்றே நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
உயா்நீதிமன்ற நீதிபதி காலியிடங்களைத் துரிதமாக நிரப்புவதற்கு மத்திய அரசு உறுதிகொண்டுள்ளது. நீதிபதி காலியிடங்களுக்கான பரிந்துரைகளை வழங்கும்போது பட்டியலினத்தோா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சிறுபான்மையினா், பெண்கள் ஆகிய சமூகத்தைச் சோ்ந்தவா்களைப் பரிந்துரைக்க முன்னுரிமை வழங்கி சமூக நீதியை நிலைநாட்டுமாறு கொலீஜியத்துக்கு அரசு வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் நீதித்துறை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தனது பதிலில் அமைச்சா் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...