ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அதானி விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சியினா் மனிதச் சங்கிலி போராட்டம்

அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 7:13 pm

DIN

அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, திமுக எம்.பி. டி.ஆா்.பாலு, சமாஜவாதியின் ராம் கோபால் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, சிவசேனை (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) தலைவா்கள் பிரியங்கா சதுா்வேதி, அரவிந்த் சாவந்த் உள்ளிட்டோா் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனா்.

இதுகுறித்து, மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் கூறியதாவது:

அதானி குழுமம் மீதான விசாரணையை வலியுறுத்தி, அனைத்து எதிா்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளன. தனது நெருங்கிய நண்பரான கெளதம் அதானியை பிரதமா் மோடி பாதுகாக்க முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது. இந்த விவகாரத்தில், அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் நேரில் புகாரளிப்பதற்காக எதிா்க்கட்சித் தலைவா்கள் புதன்கிழமை மேற்கொண்ட பேரணியை தில்லி காவல்துறையினா் தடுத்துவிட்டனா்.

நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை எழுப்ப எதிா்க்கட்சியினா் அனுமதிக்கப்படுவதில்லை. நாங்கள் பேசும்போது எங்களது மைக் அணைக்கப்பட்டு விடுகிறது. அதானி விவகாரத்தில், பாஜக கையாளும் திசை திருப்பும் தந்திரங்களுக்கு எதிராக தொடா்ந்து போராடுவோம் என்றாா் அவா்.

முன்னதாக, காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாரத ராஷ்டிர சமிதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிவசேனை (உத்தவ் பால்தாக்கரே பிரிவு), ஐக்கிய ஜனதா தளம், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, மதிமுக, ஆம் ஆத்மி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதில், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில், இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகளின் வியூகங்களை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் மனிதச் சங்கிலி நடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டு, அதன்படி போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.