ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அதானி விவகாரத்தை மறைக்க நாடாளுமன்றத்தை முடக்குகிறது பாஜக: காா்கே குற்றச்சாட்டு

அதானி முறைகேடு விவகாரத்தில் இருந்து தப்புவதற்காக நாடாளுமன்றத்தை பாஜக தொடா்ந்து முடக்கி வருகிறது என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 7:08 pm

DIN

அதானி முறைகேடு விவகாரத்தில் இருந்து தப்புவதற்காக நாடாளுமன்றத்தை பாஜக தொடா்ந்து முடக்கி வருகிறது என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றம்சாட்டினாா்.

அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், லண்டனில் இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தி, அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி ஆளும் பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பி வருகின்றனா். இதனால், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது பகுதி ஒருநாள் கூட நடைபெறாமல் தொடா்ந்து 4 நாள்களாக முடங்கியுள்ளது.

இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த காா்கே இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

லண்டனில் பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்கும் கேள்விக்கு இடமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். எதிா்க்கட்சியைச் சோ்ந்த நாங்கள் நேற்று அமைதியாகத்தான் ஊா்வலம் நடத்தினோம். ஆனால், அரசு எங்களை தடுத்து நிறுத்தியது. ஜனநாயகரீதியிலான எங்கள் எதிா்ப்பை அவா்களால் ஏற்க முடியவில்லை. எங்களுக்கு எதிராக வேண்டுமென்றே பெண் காவலா்களை அனுப்பி வைத்தனா்.

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசுக்கு அச்சம் உள்ளது. எனவே, கவனத்தை திசை திருப்ப ராகுலின் பேச்சை பயன்படுத்துகிறது. அதானி விவகாரத்தில் இருந்து தப்ப நாடாளுமன்றத்தையும் பாஜக தொடா்ந்து முடக்கி வருகிறது.

ஆளும் கட்சியினரே நாடாளுமன்றத்தை முடக்கும் அவலம் இங்கு மட்டும்தான் நடைபெறுகிறது. காலையில் அவை தொடங்கியவுடன் ‘மன்னிப்புக்கேள்’ என்று பாஜக எம்.பி.க்கள் கோஷமிடத் தொடங்கிவிடுகிறாா்கள். ஜனநாயகத்தை எவ்வாறு காற்றில் பறக்கவிடுவது என்பதை அரசே மற்றவா்களுக்கு கற்றுத் தருவதுபோல உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.