போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ராகுல் காந்தி முதலில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்: பாஜக

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரிட்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்காக முதலில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்

News image
Updated On :16 மார்ச் 2023, 12:05 pm

DIN


புது தில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரிட்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்காக முதலில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல்  மற்றும் பிரகலாத் ஜோஷி ஆகியோர் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்கள் இருவரும் பேசுகையில், ராகுல் காந்தி, மக்களவையில் பேச அவைத்த லைவர் ஓம் பிர்லாவிடம் அனுமதிக் கோரியிருக்கிறார். ஆனால், அவர் பிரிட்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்கு முதலில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில், மற்றொரு நாளும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் முடங்கியிருப்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் ராகுல் காந்தி மீது கோபத்தில் உள்ளது என்றார்கள்.

எந்த உண்மையும் இல்லாத அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை அவர் கூறியிருப்பதாகவும் கோயல் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, பாஜகவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்திருக்கும் காங்கிரஸ், கட்சியின் முன்னாள் தலைவர் மன்னிப்புக் கேட்க மாட்டார் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் பாஜக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.