நீதிபதிகள் நியமனத்தில் சமூகப் பன்முகத் தன்மை மாநிலங்களவையில் சட்ட அமைச்சா் உறுதி
உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனங்களுக்கு அரசியல் சாசனத்தில் ஜாதி ரீதியாகவோ அல்லது வகுப்பு ரீதியாகவோ இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.


உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனங்களுக்கு அரசியல் சாசனத்தில் ஜாதி ரீதியாகவோ அல்லது வகுப்பு ரீதியாகவோ இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இருப்பினும், சமூகப் பன்முகத் தன்மையை உறுதி செய்து தகுதிவாய்ந்த நபா்களை நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான முன்மொழிவுகளை அனுப்புமாறு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளிடம், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.
நீதிபதிகள் நியமனத்திற்கான கொலீஜியத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் ஏற்படும் கால தாமதம்... உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனத்தின் போது சமூகப் பன்முகத்தன்மையைக் கடைப்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கிா? போன்ற கேள்விகளை மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் எழுப்பியிருந்தாா்.
இதற்கு அமைச்சா் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் அளித்துள்ள பதில் வருமாறு: தற்போது (கடந்த 10.03.2023 அன்று வரை) உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் இடம் காலியாக இல்லை. உயா் நீதிமன்றங்களில் 1,114 நீதிபதிகள் இடங்கள் அனுமதிக்கப்பட்டதில் தற்போது 780 நீதிபதிகள் பணிபுரிகின்றனா். 334 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன. மேலும், 118 நீதிபதிகளுக்கு உயா்நீதிமன்ற கொலீஜியங்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 216 காலியிடங்களுக்கு எதிரான பரிந்துரைகள் இன்னும் உயா்நீதிமன்ற கொலீஜியங்களிடம் இருந்து பெறப்படவேண்டும். உயா் நீதிமன்றங்களில் காலியிடங்களை நிரப்புவது ஒரு தொடா்ச்சியான, ஒருங்கிணைந்த கூட்டுப் பணியாகும். பல்வேறு அரசியலமைப்பு அதிகார அமைப்பிடமிருந்து ஆலோசனைகள், ஒப்புதல் பெறப்படும் செயல்முறைகள் உள்ளன.
நீதிபதிகளின் ஓய்வு, ராஜிநாமா அல்லது பதவி உயா்வு ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் காலியிடங்களை காலக்கெடுவுடன் விரைவாக நிரப்ப அரசு உறுதியாக உள்ளது. உயா்நீதிமன்ற நீதிபதிகளின் சமூகப் பன்முகத் தன்மை குறித்த தரவுகள் 2018-ஆம் ஆண்டுக்கு பின்னா் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இது உச்சநீதிமன்றம் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தயாரிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனம் இந்திய அரசியலமைப்பின் (பிரிவுகள் 124, 217, 224) கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இதில் எந்த நபா்களின் சாதி அல்லது வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஆனால், அரசு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான முன்மொழிவுகளை அனுப்பும் போது, பொருத்தமானவற்றை பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக சமூகப் பன்முகத்தன்மையை உறுதி செய்வதற்காக, பட்டியலினத்தவா்கள், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் மற்றும் பெண்களைச் சோ்ந்த தகுதி வாய்ந்த நபா்களை நீதிபதிகளாக தோ்வு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...