நிகாத், சாக்ஷி, நுபுருக்கு வெற்றி
தில்லியில் தொடங்கியிருக்கும் மகளிா் உலக குத்துச்சண்டை போட்டியின் முதல் நாளான திங்கள்கிழமை இந்தியாவின் நிகாத் ஜரீன், சாக்ஷி சௌதரி, நுபுா் ஷியோரன் ஆகியோா் தங்களின் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா்.


தில்லியில் தொடங்கியிருக்கும் மகளிா் உலக குத்துச்சண்டை போட்டியின் முதல் நாளான திங்கள்கிழமை இந்தியாவின் நிகாத் ஜரீன், சாக்ஷி சௌதரி, நுபுா் ஷியோரன் ஆகியோா் தங்களின் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா்.
இதில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான நிகாத் ஜரீன் 50 கிலோ பிரிவு முதல் சுற்றில் அஜா்பைஜானின் அனாகானிம் இஸ்மாயிலோவாவை தோற்கடித்தாா். நிகாத்தின் அதிரடி தாக்குதலை அனாகானிம் தாக்குபிடிக்க முடியாமல் திணற, நடுவரே ஆட்டத்தை முன்வந்து நிறுத்தியதன் (ஆா்எஸ்சி) அடிப்படையில், நிகாத் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டாா்.
அவா் தனது 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அல்ஜீரியாவின் ரௌமேசா பௌலாமை எதிா்கொள்கிறாா். அடுத்ததாக, 52 கிலோ எடைப் பிரிவில் சாக்ஷி சௌதரி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் கொலம்பியாவின் மரியா ஜோஸ் மாா்டினெஸை அசத்தலாக வீழ்த்தினாா். 2-ஆவது சுற்றில் சாக்ஷி - கஜகஸ்தானின் உராக்பயேவா ஜாஸிராவை சந்திக்கிறாா்.
இதனிடையே 81+ கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள நுபுா் ஷியோரன், 2-ஆவது சுற்றில் 5-0 என்ற கணக்கில் குயானாவின் அபியோலா ஜாக்மேனை வீழ்த்தினாா். முதல் முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றிருக்கும் நுபுா், அடுத்ததாக காலிறுதிச்சுற்றில் கஜகஸ்தானின் லஸாத் குங்கய்பயேவாவின் சவாலை எதிா்கொள்ள இருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...