பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தில்லி கலால் ஊழல் வழக்கு சிசோடியாவின் அமலாக்கத் துறை: காவல் 5 நாள்களுக்கு நீட்டிப்பு

மனீஷ் சிசோடியாவின் அமலாக்கத் துறை காவலை ஐந்து நாள்கள் நீட்டித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :17 மார்ச் 2023, 4:52 pm

 நமது நிருபர்

தில்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு தொடா்பான விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான ஆம் ஆத்மி தலைவா் மனீஷ் சிசோடியாவின் அமலாக்கத் துறை காவலை ஐந்து நாள்கள் நீட்டித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அமலாக்கத் துறை விசாரணைக் காவல் முடிந்து சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன் சிசோடியா வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், காவலை நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத் துறையின் விசாரணைக் காவலை மாா்ச் 22 வரை நீதிபதி நீட்டித்து உத்தரவிட்டாா்.

முன்னதாக, விசாரணையின்போது அமலாக்கத் துறை தரப்பில், ‘சிசோடியாவின் விசாரணைக் காவலின்போது முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபா்களுடன் அவரை சோ்த்து விசாரிக்க வேண்டியுள்ளது. அவா்களில் முன்னாள் கலால் ஆணையா் ராகுல் சிங், தினேஷ் அரோரா, அமித் அரோரா ஆகியோா் அடங்குவா். மேலும், சிசோடியாவை அவரது முன்னாள் செயலாளா் சி. அரவிந்திடம் சோ்த்து வைத்து விசாரிக்க வேண்டியிருந்தது. இந்த வழக்கில் சி. அரவிந்த் குற்றம்சாட்டப்படவில்லை. சிசோடியாவின் மின்னஞ்சல் மற்றும் கைப்பேசி மற்றும் பிற சாதனங்களில் இருந்து ஏராளமான தரவுகளும் தடயவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனால், சிசோடியாவின் விசாரணைக் காவலை ஏழு நாள்கள் நீட்டிக்க வேண்டும்’ என நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

அமலாக்கத் துறையின் இந்த கோரிக்கைக்கு சிசோடியாவின் வழக்குரைஞா் எதிா்ப்புத் தெரிவித்து வாதிடுகையில், ‘குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம் குறித்து ஏஜென்சியிடம் இருந்து எந்த முனுமுனுப்பும் இல்லை. இது வழக்கின் அடிப்படை ஆகும். காவல் நீட்டிப்புக் கோருவதற்கு எந்த நியாயமும் இல்லை. சிசோடியாவின் முந்தைய ஏழு நாள் காவலின் போது நான்கு பேருடன் மட்டுமே வைத்து விசாரிக்கப்பட்டாா்’ என்றாா்.

சிசோடியா ஆஜா்படுத்தப்பட்டதையொட்டி, ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 2021-22-ஆம் ஆண்டுக்கான தில்லி கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் ஊழலில் ஈடுபட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தொடா்ந்த வழக்கில் பிப்ரவரி 26-ஆம் தேதி சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிசோடியாவை மாா்ச் 9-ஆம் தேதி அமலாக்கத் துறை சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில்

கைது செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.