இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் பகுதியில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 

Published On :

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் பகுதியில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் மித்ரிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டாக அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  

Story image

அப்போது, அநத பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதற்கு பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றமாக காணப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.