விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உத்தவ் தாக்கரேவுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

News image
படம்: ஆதித்ய தாக்கரே ட்விட்டர் பக்கம்.
Updated On :18 மார்ச் 2023, 1:13 pm

DIN

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே விளையாட்டுத் திடலில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.

மும்பை வான்கடே விளையாட்டுத் திடலில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு மகிழ்ந்தார். மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவும் ரஜினியும் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே உரையாடும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகின.

இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார். அப்போது உத்தவ் தாக்கரே குடும்பத்தினர் ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து ரஜினியுடன் உத்தவ் தாக்கரே குடும்பத்தினர் புகைப்பபடமும் எடுத்துக்கொண்டனர்.

இருப்பினும் இந்த சந்திப்பிற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.