ஆண்கள் மட்டும் செய்த வேலை.. 5,000 பெண்கள் சம்பாதிக்கத் தொடங்கியது எப்படி?

ஆண்கள் மட்டுமே செய்ய முடிந்த, செய்து கொண்டிருந்த ஒரு வேலை தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் சில ஆயிரம் பெண்களும் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஆண்கள் மட்டும் செய்த வேலை.. 5,000 பெண்கள் சம்பாதிக்கத் தொடங்கியது எப்படி?
ஆண்கள் மட்டும் செய்த வேலை.. 5,000 பெண்கள் சம்பாதிக்கத் தொடங்கியது எப்படி?


கோழிக்கோடு: ஆண்கள் மட்டுமே செய்ய முடிந்த, செய்து கொண்டிருந்த ஒரு வேலை தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் சில ஆயிரம் பெண்களும் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பெண்கள் சுயமாக சம்பாதித்து தங்களது வாழ்வை மேலும் சற்று மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்யும் இந்தப் பணியை பெண்களுக்கு பயிற்றுவிக்கும் திட்டத்தையும் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு இந்த பயிற்சியை அளிக்க போதிய ஆள்களும் தேவைப்படுகிறது.

அதற்காக முன்வந்திருப்பவர் ஷியாமளா. 48 வயதாகும் ஷியாமளா பலுசேரி பகுதியைச் சேர்ந்தவர். இவர் கோழிக்கோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5000 பெண்களுக்கு, மரம் ஏறும் கருவியைக் கொண்டு தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பதற்கான பயிற்சிகளை அளித்து அவர்களது வாழ்வில் விடிவெள்ளியாக மாறியிருக்கிறார்.

தென்னை மரத்தில் ஏறுவதற்கான கருவியை 2011ஆம் ஆண்டு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் போது ஷியாமளா தான் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார்.

உணவு இடைவேளையின்போது, இந்த இயந்திரத்தை உருவாக்கி, தென்னை மரங்களில் ஏறி சோதனை செய்வார். கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயத்துடன், இப்படி அனுமதி பெறாமல் இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவீர்கள் என்று கண்டிப்பார்களே என்ற அச்சம்தான் அதிகமாக இருக்கும் என்கிறார் ஷியாமளா.

நவீன தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்ட இந்தக் கருவியால் தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பது மிகவும் எளிமையான வேலையாகிவிட்டது என்கிறார். கேரளத்தில் அதிகம் சம்பாதிக்கும் தொழிலாக இருப்பது மரம் ஏறுவது. ஆனால் இதுவரை ஆண்கள் மட்டுமே செய்து வந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான பெண்களும் இந்த துறைக்குள் நுழைந்து கைநிறைய சம்பாதிக்கிறார்கள்.

இது தொடர்பாக கேரளத்தில் மட்டுமல்ல, இலங்கை, லட்சத்தீவுகள் மற்றும் இதர நாடுகளுக்கும் சென்று பெண்களுக்கு பயிற்சி அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போதெல்லாம் வீடுகளில் இருக்கும் தங்களது தென்னை மரங்களில் ஏறுவதற்காக கூட என்னிடம் பயிற்சி பெற பலரும் வருகிறார்கள். இவரிடம் பயிற்சி பெற்ற இவரது கணவர் ராஜனும் தற்போது பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com