6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும்: ஜெய்ராம் ரமேஷ்

கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று அக்கட்யின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 மே 2023, 1:27 pm

DIN

கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று அக்கட்யின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் 2024ஐ பார்க்க விரும்பவில்லை, ஆனால் நான் 2023 ஐ பார்ப்பேன், அது (கர்நாடகத்தில் வெற்றி) காங்கிரஸுக்கு ஒரு சூப்பர் பூஸ்டர் டோஸாக இருக்கும். தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்குச் செல்லும்போது இது காங்கிரஸை வலுப்படுத்தும். 
மேலும 2024 பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் கர்நாடகத்தின் முடிவுகள், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பேரவைத் தேர்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாரத் ஜோடோ யாத்ரா காங்கிரஸை சித்தாந்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் புத்துயிர் அளித்தாலும், கர்நாடகத்தில் வெற்றி பெற்றால் அது தேர்தல் ரீதியாக புத்துயிர் அளிக்கும். 
கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் நல்லாட்சி பற்றி பாஜக பிரச்சாரம் செய்வதை மக்கள் பார்த்துள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக மிகவும் வலுவான மின்னோட்டம் இருக்கிறது. தொங்கு சட்டப்பேரவை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தெற்கில் பாஜக ஆட்சியில் உள்ள ஒரே மாநிலம் கர்நாடகம். 
கேரளம், தமிழ்நாடு அல்லது தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.