புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கேஜரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டை கோடிக்கணக்கில் செலவழித்து சீரமைத்ததாகக் கூறி பாஜகவினர் இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :2 மே 2023, 10:34 am

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டை கோடிக்கணக்கில் செலவழித்து சீரமைத்ததாகக் கூறி பாஜகவினர் இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கரோனா பரவல் நேரத்தில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தை புதுப்பிக்க தில்லி அரசு ரூ.45 கோடி செலவிட்டதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

ஏற்கெனவே இது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் கேஜரிவாலின் வீட்டை சீரமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் உள்ள அவரின் வீட்டின் முன்பாக பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.