புதிய உச்சம்: ஒரே நாளில் ரூ.193.15 கோடி சுங்கக் கட்டணம் வசூல்!

நாடு முழுவதும் வசூலாகும் சுங்கக் கட்டணத்தின் ஒருநாள் வசூல் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய உச்சம்: ஒரே நாளில் ரூ.193.15 கோடி சுங்கக் கட்டணம் வசூல்!

நாடு முழுவதும் வசூலாகும் சுங்கக் கட்டணத்தின் ஒருநாள் வசூல் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 2021ஆம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம், சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி ஒருநாள் மட்டும் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 1.16 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.193.15 கோடி வசூலாகியுள்ளது.

இது ஒருநாள் சுங்கக் கட்டண வசூலின் புதிய உச்சமாக அமைந்துள்ளது.

மேலும், செயற்கைக்கோள்(ஜிஎன்எஸ்எஸ்) கருவி மூலம் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் செய்யும் முறையை இறுதி செய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com