பெங்களூரு: பச்சை மிளகாய், பேனா முனை, கேக், வைரம், பேட்ஸ்மேன் இவையெல்லாம் என்னவென்று சொல்ல முடியுமா? இதற்கெல்லாம் ஏதேனும் ஒற்றுமை இருக்கிறது என்று சொன்னால் அதனை யூகிக்க முடியுமா?
இவை அனைத்தும் மே 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைகள் தேர்வு செய்திருக்கும் தேர்தல் சின்னங்கள்.
பொதுவாகவே மக்கள் அனைவரும் மிகப்பெரிய கட்சிகளின் சின்னங்களைத்தான் நினைவில் வைத்திருப்பார்கள். சூரியன், இரட்டை இலை, தாமரை, கைச் சின்னம் போன்றவை இதில் அடங்கும். ஆனால், தற்போது சுயேச்சைகள் தேர்வு செய்திருக்கும் சின்னங்கள் நிச்சயம் வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
பெங்களூருவில் இருக்கும் 28 தொகுதிகளில் போட்டியிடும் 50க்கும் மேற்பட்ட சுயேச்சைகள், ஹெலிகாப்டர், லேப்டாப், சித்தார் கருவி, கிணறு, நடைவண்டி, பைனாகுலர், போன் சார்ஜர், கால்பந்து, கைத்தடி, அன்னாசி பழம், திராட்சை, டியூப் லைட், டையர், சிசிடிவி கேமரா, ஷூ என தங்களது சின்னங்களாக தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சுயேச்சைகள் தாமாக எதையும் தேர்வு செய்ய முடியாது. ஏற்கனவே தேர்தல் ஆணையம் வரையறுத்து வைத்திருக்கும் சின்னங்களில் மூன்று சின்னங்களை அவர்கள் தங்களுக்கு வழங்குமாறு பரிந்துரைக்கலாம். அதில் ஒன்றை தேர்தல் ஆணையம் வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் அடைந்தபோது, படிப்பறிவு இல்லாத மக்கள் தங்களது வேட்பாளரை தேர்வு செய்ய வசதியாக தேர்தல் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. குறிப்பாக பெங்களூரு போன்ற பகுதிகளில் சின்னங்களைப் பார்த்து வாக்களிக்கும் நபர்கள் குறைவுதான் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சினிமாவிலிருந்து விலகுகிறாரா, த்ரிஷா?

தங்கம் விலை மீண்டும் உயர்வு! எவ்வளவு?
மலையாளக் கரையோரம் யோகிபாபு!

இனிமேலும் குழப்பாம இருங்க ப்ரோ!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

