மத்திய பிரதேச பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் தசங்கா பகுதி அருகே உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் முதலில் 15 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 20 முதல் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கார்கோனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்தூர் ஐ.ஜி. ராகேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறிய அவர், தற்போது சிகிச்சையில் இருக்கும் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000, படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25,000 நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வேளாண் பொருட்களுக்கு மாநில அரசுகள் கூடுதல் விலை வழங்கக் கூடாது: மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
திமுக - விசிக தொகுதிப் பங்கீடு பேச்சு! இன்று கையெழுத்தாகிறது!

தேவெ கெளடா, கார்கே, சரத் பவாரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! பிரதமர் மோடி

உகாதி பண்டிகை! திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

