அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே பலத்த வெடிச் சப்தம் கேட்டதை தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
கடந்த 5 நாள்களில் மூன்றாவது முறையாக வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் பொற்கோயில் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
பொற்கோயில் அருகே விரைந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், வெடிச் சப்தம் கேட்ட பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண் உள்பட 3 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல் ஆணையர் கூறுகையில், இது மூன்றாவது குண்டு வெடிப்பாக இருக்க வாய்ப்புள்ளது. வெடிச்சப்தம் கேட்ட கட்டடத்துக்கு பின்புறம் இருந்து சில வெடி பொருள்கள் கிடைத்துள்ளன. விசாரணைக்கு பிறகே முழுமையான விவரங்களை தெரிவிக்க முடியும் என்றார்.
முன்னதாக கடந்த மே 6 மற்றும் 8-ஆம் தேதிகளில் பொற்கோயில் அருகே பலத்த சப்தத்துடன் வெடிப்பொருள்கள் வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் காவல்துறையினர், தடவியல் நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வைகையாற்றில் எழுந்தருளும் அழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

