துணை நிலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் கேஜரிவால்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை வியாழக்கிழமை மாலை சந்திக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
துணை நிலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் கேஜரிவால்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை வியாழக்கிழமை மாலை சந்திக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த ஒருமித்த தீர்ப்பில், புது தில்லி அரசுக்கு சேவைகள் மீது சட்டப்பேரவை மற்றும் நிர்வாக அதிகாரங்கள் உள்ளன என்று வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாரிகளை நியமிப்பதில் மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்று எழுந்த விவகாரத்தில், அதிகார வரம்பு நிர்ணயம் தொடர்பான வழக்கில், ​​தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே நிர்வாகத்தின் மீது முழு கட்டுப்பாடும் உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்ற ஆம் ஆத்மி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மூலம் மட்டுமே அதிகாரிகள் செயல்படுவார்கள் என்று ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில், முதல்வர் கேஜரிவால் துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்திப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com