கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

10, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற துணைத் தேர்வு அறிமுகம்: சிபிஎஸ்இ

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத் தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :12 மே 2023, 9:26 am

DIN

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத் தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஏதுவாக துணைத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் 2 பாடங்களிலும், 12ம் வகுப்பில் ஒரு பாடத்திலும் அதிக மதிப்பெண் பெற துணைத் தேர்வு எழுதலாம் என சிபிஎஸ்இ  தெரிவித்துள்ளது.

நாடு முழவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகின. இந்த ஆண்டு  சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.12 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 1.28 சதவீகிதம் குறைவாகும்.

பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்ற சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வை 21.86 லட்சம் மாணவர்கள் எழுதினர். 12 ஆம் வகுப்பைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ வெளியிட்டது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து பொதுத் தேர்வெழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 87.33 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 5 சதவீகிதம் குறைவாகும்.

இந்த ஆண்டு முதல் முறையாக, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பட்டியலை வெளியிடாமல் தவிர்த்துவிட்டது சிபிஎஸ்இ நிர்வாகம். அதேவேளையில், நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அதற்கான சான்றிதழ்களை அளிக்கவும் முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.