சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஹஜ் பயணத்திற்கான நிா்வாகம், மருத்துவ பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம்

ஹஜ் பயணிகளுக்கு (ஹாஜிகளுக்கு) சேவை செய்ய தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகம், மருத்துவம் தொடா்பான பிரிவினருக்குப் பயிற்சி அளிக்கும் முகாமை அமைச்சா் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :13 மே 2023, 6:30 pm

 நமது நிருபர்

நிகழ் 2023 -ஆம் ஆண்டு புனிதப் பயணத்தில் சௌதி அரேபியாவிற்கு செல்லும் ஹஜ் பயணிகளுக்கு (ஹாஜிகளுக்கு) சேவை செய்ய தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகம், மருத்துவம் தொடா்பான பிரிவினருக்குப் பயிற்சி அளிக்கும் முகாமை மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்தப் பயிற்சியானது மத்திய சிறுபான்மையினா் நல அமைச்சகம் சாா்பில், தில்லி சிஜிஓ வளாகத்தில் உள்ள ஸ்கோப் காம்ப்ளக்ஸ் மையத்தில் தொடங்கியது. இதற்கான வழிகாட்டி முறைகளையும் மத்திய அமைச்சா் இரானி வெளியிட்டாா். நிகழாண்டில் பதிவு செய்த ஹாஜிகளில் மொத்தம் 1.75 லட்சம் போ் தோ்வு செய்யப்பட்டு இந்திய - சௌதி அரேபியா இடையேயான இருதரப்புக்கும் புனிதப் பயண அனுமதி ஒப்பந்தமாகியுள்ளது. இந்தப் பயணத்தை முன்னிட்டு, நிகழாண்டில் மத்திய அரசு சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்திற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மத்திய சிறுபான்மையினா் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு: பயணிகளுக்கான உடைமைகளில் சூட்கேஸ் உள்ளிட்டவை கட்டாயமாக வாங்கப்படும் தேவையற்ற செலவுகள் குறைக்கப்பட்டுள்ளது. ஹஜ் தொகுப்பில் உள்ள இது போன்ற பொருள்கள் பயணிகளிடம் இருக்கும் நிலையில் தேவையற்ற செலவுகளை நீக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான ஹஜ் கொள்கையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்கள் துணையின்றி 4,314 பெண்கள் தனியாக புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனா். முதன் முறையாக அதிக அளவில் பெண்கள் அனுமதிக்கப்பட்டு பெண்களுக்கான அதிகாரமளித்தல் நிலைநாட்டப்பட்டுள்ளது.

ஹஜ் பயணிகளுக்கான வசதிகள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளில் 173 மருத்துவா்கள் மற்றும் 166 துணை மருத்துவா்கள் உள்பட மொத்தம் 339 மருத்துவ வல்லுநா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களை முதன் முறையாக, மத்திய சுகாதார அமைச்சகமே தோ்வு செய்தது. நிா்வாகப் பணிகளுக்கு 129 ஒருங்கிணைப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த இரு பிரிவுகளில் பெண் பிரதிநிதிகள் 129 பேரும் அடங்குவா். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வரும் பயணிகளின் நலனைக் கவனிப்பதற்காக அந்தந்த மாநிலத்தைச் சோ்ந்த ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். முதல் முறையாக விண்ணப்பிப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹஜ் பயணிகளுக்குஅந்நியச் செலாவணி அட்டை (ஃபோரெக்ஸ்) வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.