மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கர்நாடகத்தில் நாளை(மே 14) காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்!

கர்நாடகத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலத்தில், பெங்களூருவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 மே 2023, 7:12 am

கர்நாடகத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலத்தில், பெங்களூருவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தற்போதைய (பிற்பகல் 12.30) நிலவரப்படி காங்கிரஸ்- 124, பாஜக-69, மஜத -24, பிற கட்சிகள்- 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. 

இதையடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரையும் பெங்களூரு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கட்சியின் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு எம்எல்ஏக்கள் அனைவரையும் அழைத்து வர கட்சி திட்டமிட்டுள்ளது. 

தொடர்ந்து, நாளை பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.