கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியை ஒப்புக்கொண்டார் முதல்வர் பொம்மை
தேர்தலில் பாஜக அடைந்த தோல்வியை ஒப்புக்கொள்வதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார் முதல்வர் பொம்மை

கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார் முதல்வர் பொம்மை
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், தேர்தலில் பாஜக அடைந்த தோல்வியை ஒப்புக்கொள்வதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக மாநிலத்தில், பாஜகவால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளில்கூட வெற்றி பெற முடியாமல்போனதாகவும், ஆனால் அதனை காங்கிரஸ் வெற்றிகரமாகச் செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 128 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னிலை விவரங்கள் வெளியாகி வரும் நிலையில், தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை தொகுதிகளில் எண்ணிக்கை அதிகரித்தும், பாஜக படிப்படியாகக் குறைந்தும் வருகிறது. தற்போது பாஜக 66 இடங்களில் முன்னிலை பெற்றும் வருகிறது.
எங்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையைத் தொடமுடியவில்லை. ஆனால், காங்கிரஸ் அதனை வெற்றிகரமாகச் செய்துவிட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானதும், தோல்வி நிலவரம் குறித்து முழுமையாக ஆராய்வோம். ஒரு தேசியக் கட்சியாக, நாங்கள் எந்த இடத்தில் பின்தங்கினோம், எங்கெல்லாம் இடைவெளி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இந்த தேர்தல் முடிவை நாங்கள் எங்கள் பயணத்தின் ஒருபடியாக எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...