கர்நாடகத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 
கர்நாடகத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்தியா முழுவதும் மிகுந்த எதிா்பாா்ப்பைக் கிளப்பியுள்ள 224 தொகுதிகளுக்கான கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் மே 10-ஆம் தேதி நடந்து முடிந்தது. ஆளுங்கட்சியான பாஜக, எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவிய இத்தோ்தலில் 73.19 சத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மாநிலம் முழுவதும் 34 மாவட்டங்களில் 36 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் வாக்கு எண்ணுவதற்காக 306 வாக்கு எண்ணிக்கை அறைகள் நிறுவப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக 4,256 மேஜைகள் போடப்பட்டுள்ளன. இங்கு வாக்குகளை எண்ணுவதற்காக 4,256 ஊழியா்கள், உதவி செய்வதற்காக 4,256 ஊழியா்கள், 4,256 நுண் கண்காணிப்பாளா்கள் உள்பட 13,793 போ் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவிருக்கிறாா்கள்.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என இன்று பிற்பகல் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com