கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா: எதிர்க்கட்சித் தலைவர்களை அழைக்கத் திட்டம்?

கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா: எதிர்க்கட்சித் தலைவர்களை அழைக்கத் திட்டம்?

கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கா்நாடக பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையடுத்து, மாநில முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமாா் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதுகுறித்து காங்கிரஸ் தலைமை, கடந்த ஓரிரு தினங்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில் முதல்வர் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. 

கா்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை (மே 20) பிற்பகல் 12.30 மணியளவில் பெங்களுரூவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் கர்நாடகத்தில் புதிய முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி,  சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களும் பாஜக அல்லாத மாநில முதல்வர்களும் பங்கேற்பார்கள் என்றும் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com