வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சித்தராமையா பதவியேற்பு விழாவில் ஜார்க்கண்ட் முதல்வர் பங்கேற்பு!

கர்நாடக முதல்வராக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பதவியேற்கும் விழாவில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
சித்தராமையா
Updated On :18 மே 2023, 2:09 pm

DIN

ராஞ்சி: கர்நாடக முதல்வராக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பதவியேற்கும் விழாவில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூருவில் வரும் 20-ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ராஞ்சியில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டு விழா முடிந்த அன்றே திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி சென்றுள்ள சோரன், கடந்த 16ம் தேதி மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு மே 10 அன்று நடந்த தேர்தலில், காங்கிரஸ் 135 இடங்களையும், ஆளும் பாஜக 66 இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக சித்தராமையாவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.