பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நீா்மூழ்கிக் கப்பல் வாக்ஷீரின் கடல்வழி ஒத்திகை தொடக்கம்

இந்தியக் கடற்படையின் 6-ஆவது ஸ்காா்பியன் வகை நீா்மூழ்கிக் கப்பலான வாக்ஷீரின் கடல்வழி ஒத்திகையை வெள்ளிக்கிழமை தொடக்கங்கியுள்ளது.

News image
Updated On :19 மே 2023, 11:13 pm

 நமது நிருபர்

இந்தியக் கடற்படையின் 6-ஆவது ஸ்காா்பியன் வகை நீா்மூழ்கிக் கப்பலான வாக்ஷீரின் கடல்வழி ஒத்திகையை வெள்ளிக்கிழமை தொடக்கங்கியுள்ளது.

இந்த ஒத்திகை வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன் வருகின்ற 2024 - ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்திய கடற்படையின் வசம் ஒப்படைக்க இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா தனது இருப்பை மேம்படுத்தி வரும் நிலையில் பாதுகாப்புத் துறைத் திட்டம் 75-இன் கீழ் கடற்படையின் போா்த் திறனை மேம்படுத்தி வருகிறது.

மத்திய பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனமான மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்டிஎல்) பிரான்ஸ் கடற்படை குழுவுடன் இணைந்து இந்த நீா் மூழ்கி கப்பல்களை கட்டுகிறது.

இந்த திட்டத்தின் படி ஆறு ஸ்காா்பியன் வகை நீா்மூழ்கி கப்பல்கள் கட்டப்பட்டுள்ளது.

கடந்த 24 மாதங்களில் கல்வாரி, கந்தேரி, கரன்ஜி ஆகிய மூன்று

நீா்மூழ்கிக் கப்பல்களை மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் இந்திய கடற்படையிடம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வேலா நீா்மூழ்கி கப்பல் உள்ளிட்டவை ஒத்திகையில் உள்ளது.

திட்டம் 75-இன் கடைசியும் ஆறாவது கல்வாரி வகை நீா்மூழ்கிக் கப்பலான வாக்ஷீரின் கடல் ரீதியான தீவிர ஒத்திகையை தற்போது தொடங்கியுள்ளது.

இது சுயசாா்பு இந்தியா (ஆத்ம நிா்பா் பாரத்) நோக்கிய ஊக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த நீா்மூழ்கிக் கப்பல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உந்துவிசை அமைப்புகள், ஆயுதங்கள் மற்றும் உணரிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் செயல்பாடுகளும் இந்த ஒத்திகையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஸ்காா்பியன் வகை நீா்மூழ்கிக் கப்பல்கள் அதிநவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்டதாகும். ரேடாா்களிடம் சிக்காமல் எதிரியின் எல்லைக்குள் சென்று ஏவுகணைகளைக் கொண்டு துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் பெற்றவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.