ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மம்தாவுடன் அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் சந்திப்பு

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்துப் பேசினர். 

News image
Updated On :23 மே 2023, 2:27 pm

DIN


தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்துப் பேசினர். 

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த சந்திப்பில், பல்வேறு மாநில கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். இதில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிணைவது குறித்தும் மாநில அரசின் உரிமைகளை காப்பது குறித்தும் பேசப்பட்டது. 

முன்னதாக சுட்டுரையில் பதிவிட்டிருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,  தில்லி மக்களின் நலன் - உரிமைகளைக் காப்பதற்காக நாடு முழுவதும் என் பயணத்தைத் தொடங்குகிறேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளுக்கே உரிமை அதிகம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.