ஒரு கையில்லை, கால்களும் இல்லை; ஐஏஎஸ் தேர்வில் வெற்றி

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுராஜ் திவாரி, ரயில் விபத்தில் தனது வலது கை, இரண்டு கால்களை இழந்த நிலையிலும், மனம் தளராமல் யுபிஎஸ்சி தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
சுராஜ் திவாரி
சுராஜ் திவாரி

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுராஜ் திவாரி, ரயில் விபத்தில் தனது வலது கை, இரண்டு கால்களை இழந்த நிலையிலும், மனம் தளராமல் யுபிஎஸ்சி தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான இறுதித் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

தேர்வெழுதியவர்களில் மொத்தம் 933 பேரை குடிமைப் பணிகளில் நியமனம் செய்ய யுபிஎஸ்சி பரிந்துரைத்துள்ளது. இவா்களில் 41 போ் மாற்றுத்திறனாளிகள் ஆவா். அந்த 41 மாற்றுத்திறனாளிகளில் சுராஜ் திவாரியும் ஒருவர்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுராஜ் திவாரி, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். மணிப்பூரைச் சேர்ந்த சுராஜ் திவாரி, கடந்த 2019ஆம் ஆண்டு காஸியாபாத்தின் தாத்ரி பகுதியில் நடந்த ரயில் விபத்தொன்றில் சிக்கி தனது வலது கை, இடது கையில் இரண்டு விரல்கள், இரண்டு கால்களையும் இழந்தவர். 

கை, கால்களை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல், குடிமைப் பணித் தேர்வுக்குப் படித்து, தேர்வெழுதி இன்று வெற்றி பெற்று ஐஏஎஸ் ஆகியிருக்கிறார்.

தனது மகன் மிகவும் தைரியசாலி. இன்று அவன் என்னை பெருமைப்பட வைத்திருக்கிறார்.  அவரது வெற்றிக்கு வெறும் 3 விரல்களே போதுமானவை என்று பெருமிதத்தோடு சொல்கிறார் சுராஜ் திவாரியின் தந்தை ரமேஷ் குமார்.

வாழ்க்கையில் எப்போதுமே துவண்டுபோனதில்லை. கடின உழைப்பாளி, மற்றவர்களையும் கடுமையாக உழைக்குமாறு தூண்டுவான் என்கிறார் தாய் ஆஷா தேவி.
 

யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி), ஐபிஎஸ் (இந்திய காவல் பணி), ஐஎஃப்எஸ் (இந்திய வெளியுறவு பணி) மற்றும் குரூப்-ஏ, குரூப்-பி பணியிடங்களுக்கான குடிமைப் பணிகள் தோ்வு முதல்நிலை (பிரிலிமினரி), முதன்மை (மெயின்) மற்றும் ஆளுமைத் தோ்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.

இதில் முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி நடத்தப்பட்டு, அதே மாதத்தில் தோ்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. முதன்மைத் தோ்வு கடந்த ஆண்டு செப்டம்பா் 16 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, டிசம்பா் 6-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது.

இறுதித் தோ்வான ஆளுமைத் தோ்வு கடந்த 18-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. 

பொதுப் பிரிவைச் சோ்ந்த 345 போ், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினா் (இ.டபிள்யூ.எஸ்) 99 போ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) 263 போ், பட்டியலின வகுப்பினா் (எஸ்.சி.) 154 போ், பழங்குடியினா் (எஸ்.டி.) 72 போ் என மொத்தம் 933 பேரை குடிமைப் பணிகளில் நியமனம் செய்ய யுபிஎஸ்சி பரிந்துரைத்துள்ளது. இவா்களில் 41 போ் மாற்றுத்திறனாளிகள் ஆவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com