தீவிர சிகிச்சைப் பிரிவில் சத்யேந்தர் ஜெயின்! வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

திகார் சிறையிலிருந்த ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் தில்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
தீவிர சிகிச்சைப் பிரிவில் சத்யேந்தர் ஜெயின்! வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

திகார் சிறையிலிருந்த ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் தில்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் உள்ளார். 

சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு சிறையில் உள்ள குளியலறை சென்றபோது வழுக்கி கீழே விழுந்ததாகவும் அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது மருத்துவர்களின் பரிந்துரைப்படி தில்லி லோகநாயக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com