கா்நாடகத்தில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக 24 போ் அமைச்சா்களாக பதவியேற்றனர்.
கா்நாடகத்தில் மே 10-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் மே 20ஆம் தேதி பதவியேற்றனா்.
மேலும் அமைச்சா்களாக ஜி.பரமேஸ்வா், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜாா்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜாா்கிஹோளி, பிரியங்க் காா்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீா் அகமதுகான் ஆகிய 8 பேர் பதவியேற்றுள்ளனா். பேரவையின் புதிய தலைவராக யு.டி.காதா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.
இதையடுத்து மேலும் 24 இடங்கள் காலியாக இருந்த நிலையில் இன்று ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் 24 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
கிருஷ்ணபைரே கௌடா, தினேஷ் குண்டுராவ், ஈஸ்வா் கண்ட்ரே, ரஹீம்கான், சந்தோஷ் லட், கே.என்.ராஜண்ணா, கே. வெங்கடேஷ், எச்.சி.மகாதேவப்பா, பைரதி சுரேஷ், என்.எஸ்.போஸ்ராஜ், சிவராஜ் தங்கடகி, ஆா்.பி.திம்மாப்பூா், பி.நாகேந்திரா, மங்ஜாளு வைத்யா, மது பங்காரப்பா, சிவானந்த பாட்டீல், செலுவராயசாமி, சரணபசப்பா தர்ஷணாபுரா எஸ்.எஸ்.மல்லிகாா்ஜுன், ருத்ரப்பா லமானி, எம்.சி.சுதாகா், எச்.கே.பாட்டீல், லட்சுமி ஹெப்பாள்கா், சரண்பிரகாஷ் பாட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இதையும் படிக்க | நீதி ஆயோக் கூட்டம்: தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்கள் புறக்கணிப்பு!