ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மைசூரு அருகே கார்-வேன் மோதல்: 10 பேர் பலி; நிவாரணம் அறிவிப்பு

கர்நாடகத்தில் மைசூரு அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:00 pm

DIN

கர்நாடகத்தில் மைசூரு அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே திருமாகுடலு - நரசிபுரா பகுதியில் ஒரு இன்னோவோ காரும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். இதில் குழந்தைகள் 2 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும் விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.