இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி மற்றும் இறக்குமதி தொடரும்: பிரகலாத் ஜோஷி

014ம் ஆண்டில் 500 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இன்று இந்தியா உலர் எரிபொருளின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ளது.
இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி மற்றும் இறக்குமதி தொடரும்: பிரகலாத்  ஜோஷி

மும்பை: 2014ம் ஆண்டில் 500 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இன்று இந்தியா உலர் எரிபொருளின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ளது என்று மத்திய நிலக் கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மேலும் தெரிவித்ததாவது: 

2014ல் 500 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இன்று உலர் எரிபொருளை அதிக அளவில் உற்பத்தி - இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.

முதல் சுரங்க உச்சி மாநாட்டில் பேசிய ஜோஷி, இன்று இந்தியா நான்காவது பெரிய நிலக்கரி இருப்பைக் கொண்டுள்ளது என்றார்.

இந்த ஆண்டு நிலக்கரி உற்பத்தி 850 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. 2025-2026ம் ஆண்டுக்குள் அனல் நிலக்கரி இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்துவோம் என்று நம்புகிறோம். ஆய்வு மற்றும் ஏலத்திற்கு வெளிப்படையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த முதல் சுரங்க ஸ்டார்ட் அப் உச்சிமாநாட்டில் 82 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், 140 பங்கேற்பாளர்களும் உள்ளனர். இறக்குமதியைச் சார்ந்திருப்பது செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும். அதே வேளையில் இறக்குமதியை ஊக்கமின்மைபடுத்த, புதிய சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் இருக்க வேண்டும் என்றார்.

2014ல் 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக இருந்த நாம், கடந்த 9 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும், நூறு யுனிகார்ன்களையும் நாங்கள் தொட்டுள்ளோம். இதனை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நிலையான மற்றும் உகந்த சுரங்க தொழில்நுட்பம் காலத்தின் தேவையாகும். அதற்கு ஸ்டார்ட் அப் தொழில்நுட்பம் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com