தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உ.பி.யில் 65 தொகுதிகளில் அகிலேஷ் யாதவ் போட்டி!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுகளில் 65 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடத் தயாராக உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :2 நவம்பர் 2023, 12:26 pm

DIN

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுகளில் 65 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடத் தயாராக உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

பாஜக தலையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை அமைத்தனர். 

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. 

இதனிடையே, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸும் சமாஜ்வாதியும் மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் தனித்தனியாகக் களமிறங்கியுள்ளன. 

மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாதிக்கு காங்கிரஸ் கட்சி தொகுதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதேபோன்று உத்தரப் பிரதேசத்தில் தோ்தல் வரும்போது காங்கிரஸுக்கு நாங்கள் தொகுதி ஒதுக்க மாட்டோம் என்று கூறியிருந்தார். 

மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாதிக்கு 6 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் முன்வந்ததாகவும், அதனை ஏற்காமல் அகிலேஷ் யாதவ் கோபமடைந்து தனியாக வேட்பாளர்களை அறிவித்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து மாநில தலைமையகத்தில் இன்று நடைபெற்ற மாநில செயற்குழுவின் முதல் கூட்டத்தில் யாதவ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது, 

2024 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 65 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் என்றும், 15 இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதாகவும் அவர் கூறினார். 

மேலும், தனது கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அகிலேஷ், விவாதத்தின் போது அவர்கள் எந்த அற்பமான கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என்றார். “தேசிய தலைமையின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி அறிக்கைகளை வெளியிடுங்கள். கட்சிக்குள் எந்த ஒரு குழுவாதத்திலும் ஈடுபட வேண்டாம், மாறாக கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.