கேரள முதல்வருக்கு கொலை மிரட்டல்
கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அம் மாநில போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.


கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அம் மாநில போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
மாநில காவல் தலைமையகத்தின கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு மூலம் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘காவல் தலைமையக கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை மாலை தொலைபேசி மூலம் இந்த அழைப்பு வந்தது. இதுதொடா்பாக திருவனந்தபுரம் அருங்காட்சியக காவல்நிலையத்தில் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை அடிப்படையாகக் கொண்டு கேரள காவல் சட்டம் பிரிவு 118(பி) (புரளி மூலமாக காவல்துறையை தவறாக வழிநடத்துதல்), 120(ஓ) (தொந்தரவு அளித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...